Kuravan history in tamil, Narikuravan history


"சாமியோ...! ஊசி,பாசி வாங்கலையோ?...ஊசி,பாசி!..."
என்று கூறுபவர் குறவர்களா ?.....
இல்லையேல் ,
குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் குறவர்களா ?...


அதைப்பற்றி இங்கு காண்போம்! ...
தமிழரின் வரலாற்றை(history)  சரியான முறையில் தமிழரிடம் கொண்டு சேர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமை...  அதன் அடிப்படையில் இப்பதிவுகளை பதிவு செய்கிறேன்.....

யார் குறவர்கள்?
                          ஆதி தமிழர்கள் நிலங்களை நாற்பெரும் பிரிவுகளாக பிரித்து வாழ்ந்ததாக தொல்காப்பியம் கூறுகிறது."குறிஞ்சி-முல்லை-மருதம்-நெய்தல்",அதன்முறையே குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் குறவர்கள்(kuravan) என்றழைக்கப்பட்டனர்.அவர்களே தமிழ்குடிகளின் தாய்குடிகள் என்றழைக்கப்படுகிறது.குறிஞ்சி நிலத்தின் தெய்வம் முருகன் (சேயோன்) ஆவார்.

குறிஞ்சி நில மன்னர் மற்றும் புலவர்கள்:-

                     ஏறைக்கோன் மன்னன்
                     குறமகள் இளவெயினி
                     குறமகள் குறியெயினி

ஏறைக்கோன் மன்னன்:                             
           

               ஏறை என்பது மேற்குதொடர்ச்சி மலைகளில் ஒரு மலைப்பகுதி.அந்த மலையில் வாழ்ந்த குறமக்களை வழிநடத்தி  சென்ற மன்னன் ஏறைக்கோன் ஆவார்.இவரே குறமக்களின் தலைவனாக திகழ்கிறார்.இவரது ஆட்சி காலம் 
கி.மு 3ம் நூற்றாண்டு. ஏறைக்கோன் மன்னனின் பெருமையை பிறநாட்டு மன்னர்கள் முன்னிலையில் குறமகள் இளவெயினி (kuratthi)வியந்து பாடுகிறாள்.இந்த பாடல் புறநானூறு157-ல் இடம் பெற்றுள்ளது.


குறமகள் இளவெயினி:


      இவர் பரணர் காலத்தில் வாழ்ந்த சங்ககால பெண்பாற் புலவர் ஆவார்.இவர் குறக்குலத்தைச் சார்ந்த பெண்மனி என்பது குறிப்பித்தக்கது.இவருக்கு பேய்மகள் இளவெயினி என்று சிறப்பு பெயரும் உண்டு.இவர் பாலை பாடிய "சேரமான் பெருங்கடுங்கோனின்" மறத்திறத்தையும், கொடைத்திறத்தையும் போற்றிப் பாடியுள்ளார்.இந்த பாடல் புறநானூறு11-ல் இடம்பெற்றுள்ளது.
மேலும் தன் குலத்தலைவனான ஏறைக்கோன்(kuravan) மன்னனின் பெருமையை பிறநாட்டு மன்னர்கள் முன்னிலையில் குறமகள் இளவெயினி வியந்து பாடியுள்ளார்.இந்த பாடல் புறநானூறு157-ல் இடம் பெற்றுள்ளது.

குறமகள் குறியெயினி:

      இவர் சங்ககால பெண்பாற் புலவர் ஆவார்.குறி சொல்லும் பெண்ணாக இருந்தமையால் இவரைக் குறி-எயினி என்றனர். குறிஞ்சி நிலத்துப் பெண் குறத்தி ஆவர்,அதன்முறையே "முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளுமாகையால் "குறிஞ்சி நிலக் குறமகள் எயினியாகவும் திணைநிலத் திரிவால் பேசப்படுகிறாள்.குறமகள் (kuratthi)இளவெயினி என்னும் புலவர் பெயரிலும் இந்தப் பெயர் அமைப்பை உணரலாம்.இவரது பாடல் நற்றிணை357-ல் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு பண்டைத் தமிழகத்தில் வாழ்ந்த குறக்குடியினர் சிறந்த கல்விநலமும்,வீரநலமும்,
பண்புச்செவ்வியும் உடையவராக திகழ்கின்றனர்.அவற்றுள் மகளிரே சிறந்த செய்யுள் செய்யும் அளவிற்கு பெரும்புலமை பெற்று திகழ்கின்றார்கள்.
இத்துணை சிறப்புமிக்க, பெருமைமிக்க பழம்பெருமை வாய்ந்த குறிஞ்சிநில தாய்குடி குறவர்களை குருவிக்காரர்களோடு ஒப்பீட்டுக் கூறுவது மிகவும் வருந்தத்தக்கது. இச்செயல் கருவில் இருக்கும் குழந்தையை கருவோடு அழிப்பதற்கு சமமாகும்.இந்த அவலநிலை ஒட்டு மொத்த உலக தமிழர்களுக்கு அவமானத்தை கொண்டு சேர்ப்பதாகும்.

                     பண்டைய காலக்கட்டத்தில் குறிஞ்சி நில தாய்குடி குறவர்களுக்கென்று தனி புகழும், சிறப்பும்,பெருமையும் இருந்தது என்று தொல்காப்பியத்திலும்,சங்க இலக்கியங்களிலும் காணலாம். ஆனால் இன்றைய நாகரிக காலகட்டத்தில் குறவர்கள் (kuravan)என்றால் ஊசி,பாசி விற்கும்  குருவிக்காரர்களாக கருதப்படுகின்றனர்.இந்த அறியாமை தான் தமிழ் தாய்குடிகளை தலைகுணிய வைக்கின்றது.

குருவிக்காரர்கள் யார்?

          இன்று நரிக்குறவர்கள் என்று தமிழர்களால் அழைக்கப்படும் குருவிக்காரர்கள் பிறந்தது மராட்டிய மாநிலம் ஆகும்.பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் மராட்டிய மாநிலத்தில் பெரும்போர் ஏற்பட்டது,அப்போது அங்கு ஆட்சி செய்த மன்னன் சிவாஜிராவ்-யை எதிர்த்து முகலாயர்கள் போர் தொடுத்தனர்.அந்த போரில் முகலாய அரசு சிவாஜி பேரரசை வீழ்த்தியது.எனவே சிவாஜி பேரரசின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த மக்கள் போரின் தாக்கம் தாங்க முடியாமல் பெண்களின் கற்புகளை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒவ்வொரு நாடாக, மாநிலமாக இடம்பெயர்ந்தனர். அவ்வாறு இடம்பெயர்ந்த குருவிக்காரர்கள்  மேற்குதொடர்ச்சி மலைகள் வழியாக தமிழகத்தை வந்தடைந்தனர்.அவர்கள் பேசும்மொழி வாக்ரிபோலி ஆகும். இத்த மொழிக்கு எழுத்துவடிவம் கிடையாது. இவர்களை நரிக்காரர்கள் என்றும்,வாக்ரிவாலா என்றும் கூறுவர்.


குருவிக்காரர்களின் வேறு பெயர்கள்:-

ஆந்திராவில்-‌நக்கலா,நக்கலவாண்டுலு, பிள்ளைகுத்து அம்மு எனவும்.
கல்கத்தாவில்-சிங்களன் எனவும்.
ராஜஸ்தானில்வாக்ரி,பாக்டி,சிங்கா எனவும்
கேரளத்தில்-‌குருவிக்காரர் எனவும்
கர்நாடகத்தில்-ஹக்கிபிக்கி எனவும்
மகாராஷ்டிரத்தில்-‌பார்தா எனவும் கூறுவர்.
ஆனால் தமிழ்நாட்டில்-குறவன், குளுவன்,நரிக்குறவன்,
நரிக்குறவ கூட்டம்,நரிக்குறவ சாதி என்று கூறுகின்றனர்.

குன்றில் வாழ்ந்தவர்களே குறவர்கள் ஆவர்.ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்த குருவிக்காரர்களை குறவர்கள் என கூறக் காரணம் என்ன? என்பது அனைத்து தமிழ் தாய்குடிகளின் கூற்றாக உள்ளது.

குருவிக்காரர்களை குறவர்கள் என கூறக் காரணம் :-


            மராட்டிய மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்தடைந்த குருவிக்காரர்கள் கூடாரம் அமைத்தும் ,ஊசி ,பாசிகளை விற்றும் , பச்சைகுத்தும் தொழில்களை செய்தும்,துப்பாக்கியால் காடை கௌதாரிகளை பிடித்தும் வாழ்ந்து வந்தனர்.1960-ம் ஆண்டில் "குறவஞ்சி"  என்ற பெயரில் தமிழ் திரைப்படம் ஒன்று வெளியானது, இத்திரைப்படத்தை எழுதியவர் மு.கருணாநிதி ஆவார். இத்திரைப்படத்தில் குருவிகாரர்களை குறவன்-குறத்திகள் எனவும், அவர்கள் ஊசி ,பாசிகளை விற்பதுபோலவும், காடை-கௌதாரிகளை வேட்டையாடுபவர் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதன்முறையே குறவன்-குறத்திகள் என்றாலே ஊசி ,பாசிகளை விற்பவர்கள் என்று அனைத்து மக்களின் மனதில் ஆழமாக பதித்துள்ளனர்.இப்பாவச்செயலை இதோடு நிறுத்தாமல் 1971-களில் தமிழ்நாட்டை ஆட்சி செய்த மறைந்த மாண்புமிகு முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் ஆதிதமிழர்களின் வாழ்வியல்களை பொருட்படுத்தாமல், திராவிடத்தை முன்னேற்றும் வகையில் குருவிகாரர்களுக்கு நரிக்குறவர்கள் என்ற அடையாளத்தை சூட்டி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதன் விளைவாக 1972-ம் ஆண்டில் "குறத்தி மகன்"(kuratthi magan) என்ற பெயரில் தமிழ் திரைப்படம் ஒன்று வெளியானது,இதிலும் குறிஞ்சி நில தாய்குடி குறவர்களை, குருவிக்காரர்களாக சித்தரிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது.குறிஞ்சி நில தாய்குடி குறவர்களின் வாழ்வுரிமை அழிக்கப்பட்டதற்கு முன்னோடியாக திகழ்பவர் மறைந்த மாண்புமிகு முதல்வர் மு.கருணாநிதி ஆவார் என்று அனைத்து தரப்பு மக்களின் கூற்றாக கூறப்படுகிறது.இச்செயலே குருவிக்காரர்கள் குறவர்கள் என கூறக் காரணமாயிற்று.

தாய்குடிகளின் கூற்று:-


         இன்றைய நாகரிக காலக்கட்டத்தில் குறவர்கள்(kuravan kuratthi) என்ற சொல்லை கேட்டால் அனைவருக்கும் தெருக்களிலும்,பேருந்து நிலையங்களிலும் ஊசி,பாசிகளை விற்கும் குருவிக்காரர்களே ஞாபகத்திற்கு வருகின்றனர், இந்த அறியாமை என்னும் அவலநிலை மாற வேண்டும். இந்த அறியாமை இருளைப் போக்குவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும்,சமூக ஆர்வலர்களும் போராடி வருகின்றனர் .குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களே குறவர்கள் ஆவர். ஊசி,பாசிகளை விற்கும் குருவிக்காரர்கள் வந்தேரிகள் ஆவர்.அனைத்து மக்களின் உள்ளத்தில் குறவர்கள் வேறு, குருவிக்காரர்கள் வேறு என்ற மனப்பான்மை வளர வேண்டும் என்பதே தாய்குடிகளின் கூற்றுகளாகும். இன்று குறவர் இன மக்கள் கல்வியிலும், விளையாட்டுகளிலும், அரசியலிலும் சிறந்தவர்களாக திகழ்கின்றனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
       
         சரித்திரம் தொடரும்.......!!!!
        



                                                                                       

    
   
               
      

N.Ajay

11 comments:

  1. குறவர்கள் சமூகத்திற்க்கும் இந்த மடமையுள்ளம் கொண்ட மக்களால் அறியப்பட்ட இனம் (நரிக்குறவர் )அல்ல நரிக்காரன் குருவிக்காரன் என்ற இனத்துக்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. குறவர்கள் என்பவர்கள் பண்டைக்கால தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மலையும் மலை சார்ந்த பகுதியுமாகிய குறிஞ்சிநிலத்தில் வாழ்ந்தவர்கள்.. குற்றாலக்குறவஞ்சி போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாக அறியப்பட்டவர்கள். ஆனால் இந்த நரிகாரன் குருவிகாரன் என்பவர்கள் தமிழகத்தில் வந்து குடியேறியவர்கள் என்பதை அருமையாக பதிவு செய்த உறவுக்கு நன்றி. இந்த குருவிகரர்களுக்கு இலக்கிய வரலாறுகள் எதுவும் கிடையாது. சில மூடர்கள் தவறாக இந்த நரிகாரனை வரலாறு தெரியாமல் பூர்வகுடி என்று
    வலைதளத்தில் தவறாக புனைக்கப்பட்டு பதிவு செய்கிறார்கள் அதனை தயவு செய்து நீக்குங்கள்.

    ReplyDelete
  2. தமிழ் நிலத்தின் மூத்தகுடியான குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த குறவர் வேடுவர் சித்தனார் மக்களின் வரலாற்று மீட்டெடுப்பு.... மகிழ்ச்சி 👍👍👍👍😍😍😍😍💪🏼💪🏼💪🏼🙏🙏🙏🔥🔥🔥

    ReplyDelete
    Replies
    1. நன்றி உறவே..🙏🙏🙏

      Delete
  3. குறவர் தமிழ் குடிமக்கள். மராட்டியர்(குருவிக்காரன்)மகாராட்டிர மாநிலத்தில் வாழ்ந்தவர்கள். முகலாய படையெடுப்பின் போது நாட்டின் பல பகுதிகளில் புலம் பெயர்ந்த மக்கள்.

    ReplyDelete
  4. அவர்கள் தமிழர்கள் அல்ல

    ReplyDelete
  5. அவர்கள் தமிழர்கள் அல்ல

    ReplyDelete
  6. Vaalthukkal urave arumaiyana pathiu

    ReplyDelete
  7. அருமையான பதிவு

    ReplyDelete
  8. அருமையான பதிவு

    ReplyDelete

(குறிப்பு - மறுப்பு இருப்பவர்கள் நாகரிக முறையில் சங்க இலக்கிய சான்றுகளுடன் கமெண்ட்-ல் பதிவு செய்யுங்கள்)