ஐந்திணைகள்

இப்பதிவின் தலைப்பை பார்த்ததும் சிலருக்கு எதனால் இந்த பதிவு என்று தோன்றலாம். தமிழரின் வரலாற்றை சரியான முறையில் தமிழரிடம் கொண்டு சேர்க்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமை... (5Thinaigal) அதன் அடிப்படையில் இப்பதிவை பதிவு செய்கிறேன்.(குறிப்பு - மறுப்பு இருப்பவர்கள் நாகரிக முறையில் சங்க இலக்கிய சான்றுகளுடன் கமெண்ட்-ல் பதிவு செய்யுங்கள்)

தமிழரின் வாழ்க்கை முறை கலாச்சாரம், பண்பாடு போன்றவைகளை அறிய உதவுவது, சங்ககால இலக்கிய நூல்கள் ஆகும். அவற்றுள் தொன்மையானது தொல்காப்பியம். கி.மு 4ம் நூற்றாண்டைச்சாந்த மிகப் பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும்.
குறிஞ்சி-முல்லை-மருதம்-நெய்தல்-நிலங்கள்:-
ஆதி தமிழர்கள் நிலங்களை நாற்பெரும் பிரிவுகளாக பிரித்து வாழ்ந்ததாக தொல்காப்பியம் கூறுகிறது. அதன்முறையே...
- மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்றும்,
- காடும் காடு சார்ந்த இடமும் முல்லை என்றும்,
- வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என்றும்,
- கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்றும் கூறுகிறது.
இவற்றின் தெய்வமாக தொல்காப்பியம் கீழ்கண்டவாரு கூறுகிறது.
"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும்படுமே"
(தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:5)
குறிஞ்சி-முல்லை-மருதம்-நெய்தல்-தெய்வங்கள்:-
- குறிஞ்சி நிலத்தின் தெய்வம் சேயோன் (முருகன்) என்றும்...

- முல்லை நிலத்தின் தெய்வம் மாயோன் (திருமால்) என்றும்...
- மருத நிலத்தின் தெய்வம் வேந்தன் (தெய்வேந்தன்) என்றும்...

- நெய்தல் நிலத்தின் தெய்வம் வருணன் (வருண தேவன்) என்றும்... கூறுகிறது.

குறிஞ்சி திணையில்...
மக்களாக : குன்றுவர், குறவர், குறத்தியர், கானவர், பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடிச்சி, இறவுளர் முதலியோர்களும்...
மரங்கள் : வேங்கை, அகில், சந்தனம், மூங்கில்
விலங்குகள் : குரங்கு, கரடி,புலி, பன்றி
பறவை : கிளி, மயில்
பறை : தொண்டகம், வெறியாட்டு
பண் : குறிஞ்சி யாழ்
மலர்கள் : குறிஞ்சி, காந்தள், வேங்கை
தொழில் : கிழங்கு அகழ்தல், தேன்எடுத்தல், வெறியாடல், தினைகாத்தல்
நீர் நிலை : அருவி, சுனை
உணவு : தினை, மலைநெல், மூங்கிலரிசி
ஊர் : சிறுகுடி
முல்லை திணையில்...
மக்கள் : இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், குறும்பொறை, நாடன், தோன்றல், கிழத்தி முதலியோர்களும்...
பறவை : கானக்கோழி, சிவல்
விலங்கு : மான், முயல்
ஊர் : பாடி, சேரி, பள்ளி
பூக்கள் : முல்லை, குல்லைப்பூ, தோன்றிப்பூ, பிடவம்பூ
மரங்கள் : கொன்றை, காயா, குருந்தம்
உணவு : வரகு, சாமை
பறை : ஏறு கோட்பறை
யாழ் : முல்லையாழ்
நீர்நிலை : கான்யாறு
தொழில் : நிரைமேய்த்தல், வெண்னை எடுத்தல் முதலியன.
மருத திணையில்...
மக்கள் : உழவர், உழத்தியர், மள்ளர், கடையர், கடைசியர், ஆற்றுக்காலாட்டியர், களமர், தொழுவர், ஊரன், கிழவன், மகிழ்நன், மனைவி முதலியோர்களும்...
பறவைகள் : நாரை, குருகு, தாரா, அன்றில்
விலங்குகள் : எருமை, நீர்நாய்
மலர்கள் : தாமரை, கழுநீர், குவளை
மரங்கள் : காஞ்சி, மருதம்
உணவு : செந்நெல், வெண்நெல்
பண் : மருத யாழ்
பறை : நெல்லரி (கிணை பறை)
தொழில் : களைகட்டல், நெல்லரிதல், கடாவிடல்
நீர் நிலை : பொய்கை, ஆறு.
நெய்தல் திணையில்...
பரதர், பரத்தியர், நுளையர், நுளைச்சியர், வலைஞர், அடவர், சேர்ப்பன், திமிலர் முதலியோர்களும் வாழ்ந்ததாக தொல்காப்பியம் கூறுகிறது.
பறவைகள் : கடற்காகம்
விலங்குகள் : சுறா
மரங்கள் : கண்டல், புன்னை, ஞாழல்
மலர்கள் : நெய்தல், தாழை, கடம்பு
பண்: மீன்கோட் பறை, விளரி யாழ்
தொழில்: மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு உணக்கல், உப்பு விற்றல், கடல்கடந்த வணிகம், முத்துக் குளித்தல்
உணவு : மீன்
நீர் நிலை : கேணி, கடல்
பாலை நிலம்:-
இது தவிற பாலை என்ற ஒரு நிலம் இருந்ததாக தொல்காப்பியம் கூற கானோம். அதற்கு பின் தோன்றிய சிலப்பதிகாரத்தில் பாலை நிலம் பற்றி பின்வருமாறு கூறுகிறது.

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து, நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" என்கிறது.
(காடுகாண் காதை, 64-66)

பாலை என்பது மணல், மணல் சார்ந்த இடமும் ஆகும். பாலை நிலத்தின் தெய்வமாக கொற்றவை (காளி) எனவும்,

பாலை திணையில் ...
மக்கள் : எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர், விடலை, காளை, மீளி முதலியோர்களும் வாழ்ந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றனர்.
(Iynthinaigal)
பறவைகள் : பருந்து, கழுகு
மரங்கள் : உழிஞ, பாலை, இருப்பை
மலர்கள்: மராம்பு
பண்: பஞ்சுரப் பண் (பாலை) யாழ்
பறை : ஆறலை, சூறைகோள்
தொழில் : வழிப்பறி செய்தல், சூறையாடல், ஆறலைத்தல்
உணவு: ஆறலைத்தலால் வரும் பொருள்
நீர்: கிணறு
விலங்கு: வலியிலந்த புலி
யாழ்: பாலையாழ்
ஊர்: குறும்பு....
சரித்திரம் தொடரும்...
No comments:
Post a Comment
(குறிப்பு - மறுப்பு இருப்பவர்கள் நாகரிக முறையில் சங்க இலக்கிய சான்றுகளுடன் கமெண்ட்-ல் பதிவு செய்யுங்கள்)